முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரியில் பேரிடர் மீட்பு குழுவினருக்கு  வட்டாட்சியர் நேரில் சென்று ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      சென்னை

பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட ஆலாடு ஊராட்சியில் கொளத்தூர்,ஆலாடு`உள்ளிட்ட சில கிராமங்கள் உள்ளன.

மழை வெள்ளம்

இந்த கிராமங்கள் ஆரணியாற்று படுகையின் ஓரம் அமைந்துள்ளது.கடந்த 2015 மழை வெள்ளத்தின் போதும் 2016 வர்தா புயலின் போதும் இப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட இந்த ஆலாடு பகுதியினை மத்திய ஆய்வுகுழு நேரிடையாக வந்து ஆய்வு செய்தது. ஆண்டுதோறும் புயல்,மழை வெள்ளத்தின் போது கரையோரம் அமைந்துள்ள இக்கிராமங்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதால் இப்பகுதி இளைஞர்கள் தன்னார்வலர்களைக் கொண்டு பேரிடர் மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவிற்க்கு தக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.இளைஞர்களின் இந்த ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாக பொன்னேரி வட்டாட்சியர் ஐவண்ணன் ஆலாடு ஊராட்சிக்கு நேரிடையாக சென்று மீட்புகுழு இளைஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த நிகழ்வில் பொன்னேரி சிறப்பு தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன்,துணை தாசில்தார் ரஜினிகாந்த்,வருவாய் ஆய்வாளர் பாரதி,கிராம நிர்வாக அலுவலர்கள் சாந்தினி,ஜானகிராமன்,கொளத்தூர் கிராம நிர்வாகிகள் கலைசெல்வன்,சந்திரசேகர்,முனிவேல்,கமலா உள்ளிட்ட கிராம பெரியோர்கள்,வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்