முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமை நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ரவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, "திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்ட வறட்சி நிவாரணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 7 செண்ட் நிலம் உள்ள விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும், 4 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு ரூ.1,500 வழங்கி உள்ளனர். எந்த அடிப்படையில் வறட்சி அளவீடு செய்தார்கள் என்று தெரியவில்லை. மேலும் பல விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வறட்சி நிவாரணம் வந்து சேரவில்லை. வறட்சி நிவாரணம் பெறும் விவசாயிகள் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பசுமை புரட்சி ஏற்பட்டபோது விவசாய உற்பத்தியை பெருக்க விதை, உரம் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கினர். அதுபோல், இப்போதும் வழங்கி விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். அரசுக்கு சொந்தமாக உள்ள இடங்களில் வளர்ந்து கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். சாத்தனூர் அணையில் 47 அடி அளவுக்கு மண் தூர்ந்து கிடக்கிறது. அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தில் 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வங்கிகள் நெருக்கடியால் 2 பேர் தற்கொலை செய்துக்கொண்டனர். பயிர்கள் காய்ந்ததை கண்டு 3 பேர் அதிர்ச்சி மரணமடைந்துள்ளனர். இது குறித்து ஆட்சியர் அறிவிக்கை வெளியிட வேண்டும். சமுத்திரம் ஏரியில் மண் கொள்ளையடிப்பதை தடுத்து ஏரியை பாதுகாக்க வேண்டும். சிறு விவசாயிகளுக்கான சான்றுகளை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். மாடுகளுக்கு வழங்கப்படும் உலர் தீவனத்தில் முறைகேடு நடைபெறுகிறது. எடை குறைவாக உள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்