முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் இதுவரை சீமைக்கருவேல மரங்கள் 33 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது: கலெக்டர் வா.சம்பத், தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டம், எடப்பாடியில் சீமை கருவேலமரங்களை அகற்றுவதை கலெக்டர் வா.சம்பத், ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது.உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க சீமைகருவேல மரங்கள் நிலத்தடி நீரை வற்ற செய்வதுடன் காற்றினை ஈரப்பதத்தை உறிஞ்சி, நச்சுக்காற்றை வெளியிடும் தன்மையும், மண் வளத்தை குறைக்கும் தன்மையுடை சீமைகருவேல மரங்களை முழுமையாக அகற்றும் பணி சேலம் மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய துறைகளை ஒருங்கிணைந்து சிமைக்கருவேலமரங்களை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. இது குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தி தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியினை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.தனியார் நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுவதற்கு குறிப்பாணைகள் வழங்கப்பட்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வட்டார அளவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை ஆகிய துகைள் அடங்கி குழுக்களை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். சீமை கருவேல மரங்களை அகற்றியது குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இதுவரை 33 சதவீதம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், வட்டாட்சியர் சண்முகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago