முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      திருவள்ளூர்

 

தமிழக அரசால் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வருவாய் பின்தொடர் பணியின்கீழ் வருவாய் பதிவேடுகளில் இந்நாள் வரையிலான பதிவுகளை சரிசெய்து நில உரிமையாளர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது, நத்தம் புறம்போக்கு வகைபாட்டில் வீடுகட்டி குடியிருந்து வரும் நபர்கள் அனைவருக்கும் நத்தம் பட்டா வழங்கப்படுகிறது.

வீட்டு வரி ரசீது

நத்தம் பட்டா பெறுவதற்கு பட்டா கோரும் நபர் வீடுகட்டி குடியிருக்க வேண்டும். விட்டு வரி ரசீது ஆவணமாக இணைக்கப்பட வேண்டும். இதுதவிர்த்து 30 ஆண்டுகள் வில்லங்கமற்ற பத்திர ஆவணங்கள் தொடர்பு ஆவணத்தை ஆதாரமாக காட்டி தங்களது பெயரில் நத்தம் பட்டா பெற்றுக்கொள்ளலாம்.நகரப்பகுதிகளி;ல் நன்செய், புன்செய், மானாவாரி வகைபாடுகளில் உள்ள பட்டா நிலங்களில் வீட்டுமனைகளாகப் பிரித்து வீடுகட்டி குடியிருப்போர்களுக்கும், டவுன் சர்வே பட்டா வழங்கப்படுகிறது.

திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி வசிப்பவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே அதற்குள்ளாக பட்டா பெறாதவர்கள் உடனடியாக நத்தம் நிலவரிதிட்ட தனிவட்டாட்சியர் அம்பத்தூர் அவர்களை அணுகி பட்டா பெற்றுக்கொள்ளலாம்.இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பட்டாக்களை இனிவரும் காலங்களில் முக்கிய ஆவணமாக கருதப்படும் என்பதால் இதுவரை பட்டா பெறாதவர்கள் தங்கள் சொத்துக்குரிய ஆவணங்களை நத்தம் நிலவரித்திட்ட வட்டாட்சியரிடம் ஆஜர்படுத்தி இத்திட்டத்தின் மூலம் புகைப்படத்துடன் கூடிய பட்டா பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் திருவள்ளுர் மாவட்டத்திலடங்கிய,திருவொற்றியூர் வட்டம் - கத்திவாக்கம் நகராட்சி (ம) திருவொற்றியூர் நகராட்சி மாதவரம் வட்டம் - மாதவரம் நகராட்சி திருவள்ளுர் வட்டம் - ஆவடி நகராட்சி, ஆவடி வட்டம் - ஆவடி நகராட்சி ஆகிய நகராட்சி பகுதிகளில் நகர நிலவரி திட்டம் அந்தந்த தனிவட்டாட்சியர்கள் மூலம் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்ட நகர நிலவரித்திட்ட தனிவட்டாட்சியரை அணுகி பட்டா பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி கேட்டுக்கொள்கிறார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago