முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வூதியர்கள் இ_சேவை மையங்களில் உயிர்வாழ் சான்று பெறலாம்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      நீலகிரி

ஓய்வூதியர்கள் இ_சேவை மையங்களில் உயிர்வாழ் சான்று பெற்று கருவூலங்களில் சமர்பிக்க ஜூன் 30_ந் தேதி கடைசி நாள்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                               ஙீஙுஜீவன் பிரமான்

தமிழ்நாடு அரசு கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மூலமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியர்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1_ந் தேதி முதல் ஜூன் 30_ந்தேதிக்குள் கருவூலத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது தங்களது உயிர்வாழ் சான்றினை சமர்பிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் கூடுதல் வசதியாக ஜீவன் பிரமான் என்ற மத்திய அரசின் உயிர்வாழ் சான்றினை பெற்று கருவூல இணையதளத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு இ_சேவை மையங்கள் மூலமாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.                                           

ஜீவன் பிரமான் மூலம் மின்னணு உயிர் வாழ் சான்றிதழ் கருவூலத்தில் அளிப்பதற்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ_சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து கைவிரல் ரேகையைப் பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும்.

                            இ_சேவை மையம்

 இதற்கு சேவை கட்டணமாக ரூ.10 மட்டும் இ_சேவை மையத்தால் வசூல் செய்யப்பட்டும். மேலும் ஆதார் எண், ஓய்வூதியம் எண், ஓய்வூதியம் அனுப்பும் அலுவலகங்களான ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் அல்லது மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலைக் கருவூலம் ஆகிய விபரங்களை இ_சேவை மையத்தில் கொடுக்க வேண்டும். ஜீவன் பிரமான் இணைய தளம் மூலமாக அனுப்பப்படுகின்ற உயிர் வாழ் சான்றுகள் உரிய கருவூலத்தில், ஓய்வூதிய அலுவலகத்தில் சரிபார்த்து பதிவுகள் மேற்கொள்ளப்படும். ஜீவன் பிரமான் இணைய தளத்தில் உயிர்வாழ் சான்றினை ஓய்வூதியர்களுக்கு உரிய வசதிகள் இருப்பின் தனிப்பட்ட முறையிலும், மின்னணு உயிர்வாழ் சான்றினை ஜீவன் பிரமான் மூலமாக அளிக்கலாம். அவை கருவூலத்தில் சரிபார்க்கப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்