முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்நவேறு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் எம்.ரவி குமார் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் எம்.ரவி குமார் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பாக, ஒன்றுக்கு மேற்பட்ட மகனை இராணுவ பணிக்கு அனுப்பிய 14 பெற்றோருக்கு போர் பணி ஊக்க மானியமாக ரூ.2,40,000/=ம்மும், படைப்பணியின் போது எதிரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த முன்னாள் படைவீரரின் விதவை மனைவிக்கு கருனைத் தொகை ரூ50,000/=ம்மும், படைப்பணியின் போது ஊனமுற்ற முன்னாள் படைவீரர் 2 பேருக்கு கருணைத்தொகை தலா ரூ.30,000/=ம்மும், முன்னாள் படைவீரர் 2 பேருக்கு மொத்தமாக வங்கி கடன் வட்டி மானியமாக ரூ.25,504/=ம்மும், முன்னாள் படைவீரர் 2 பேருக்கு கண் கண்ணாடி மானியமாக ரூ.5,200/=ம்மும் மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.3,80,704/=மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் படைவீரர் கொடிநாள் 2014-ல் சிறப்பாக வசூல் செய்து சாதனை படைத்த கோவில்பட்டி சார்பதிவாளர் செல்வகுமாரி, மாவட்ட தொடக்க கல்வி உதவியாளர் முத்துஜெயலெட்சுமி, வட்டாட்சியாகள் வெங்கடாசலம், நாகராஜன், செல்வகுமார், ஜெகநாதன், சொற.சந்திரன், ஆறுமுகனேரி டவுண் பஞ்சாயத் நிர்வாக அலுவலர் குற்றாலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், ஆகியோருக்கு மேதகு மாநில ஆளுநர் மற்றும் தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் மேலும் காலஞ்சென்ற முன்னாள் படைவீரரின் வாரிசுதாரர் மாரியப்பன் அவர்களுக்கு மீன் வளத்துறையில் மீன் வள மேற்பார்வையாளர் பணி நியமன ஆணையையும் கலெக்டர் எம்.ரவி குமார் வழங்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்