முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உல்லத்தி ஊராட்சி தலைகுந்தா பகுதியில் மாபெரும் தூய்மை பாரத இயக்க முகாம்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி தலைகுந்தா பகுதியில் மாபெரும் தூய்மை பாரத இயக்க முகாம் நடைபெற்றது.

                              தூய்மை பாரதம்

நீலகிரி மாவட்ட கலெக்டரின் அறிவுரையில் பேரில், மாவட்ட நிர்வாகத்துடன் நீலகிரி டூரிஸ்ட் டாக்சி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஊட்டி ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட தலைகுந்தா பகுதியில் மாபெரும் தூய்மை முகாமை நடத்தினர். இம்முகாமில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) பழனிபிரபு தலைமை தாங்கி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கையுறை, குப்பைகளை சேகரிக்கும் சாக்குப்பை முதலியவற்றை வழங்கி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது-

                         குப்பைகள் செல்வம்

தூய்மை பாரத இயக்கத்தின் முக்கிய நோக்கமே ஒட்டுமொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான். குப்பைகள் அது குப்பைகளல்லா, அவைகள் எல்லாம் செல்வம். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்தெடுத்து மக்கும்குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மீண்டும் சுழற்சி முறையில் உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் நபர்களுக்கு தூய்மை காவலர்கள் என்று பெயர் கொடுத்துள்ளோம். எனவே தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் உங்கள் பகுதியில் குப்பைகளை சேகரித்து வைத்தால் அதனை நாங்களே வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வோம். எனவே நீங்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றார்.

                                 ஊர் சுத்தமானால் நாடு சுத்தமாகும்

ஊட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லட்சுமி நரசிம்மன் பேசும்போது, நமது மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாப் தலங்களுக்கு அழைத்துச்செல்லும் நீங்கள் நமது மாவட்டத்தின் பெருமைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி பிளாஸ்டிக் குப்பைகளை வெளியில் வீசக்கூடாது  என்று கூறவேண்டும். ஊர் சுத்தமானால் தான் நாடு சுத்தமாகும். எனவே அனைவரும் குப்பையில்லா நகரை உருவாக்க பாடுபட வேண்டும் என்றார்.

                              பார்க்கிங்கில்

வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீச்சந்திரன் பேசும் போது, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பார்க்கிங் பகுதியில் வானத்தை நிறுத்தும் போது அந்த இடங்களில் குப்பைகளை போடாமல் சுற்றுலாப் பயணிகளை குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுமாறு அறிவுறுத்த வேண்டும். வழியில் எங்கும் குப்பைகளை வீசாமல் ந கரை சுத்தமாக வைக்க உதவ வேண்டும் என்றார்.

                        200_க்கும் மேற்பட்டோர்

முகாமில் புதுமந்து காவல்நிலை ஆய்வாளர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, சிவக்குமார், ஊராட்சி செயலர் சுப்பிரமணி, நீலகிரி டூரிஸ்ட் டாக்சி டிரைவர் மற்றும் உரிமையாளர் நல சங்க தலைவர் குருமூர்த்தி, செயலாளர் சுரேஷ்பாபு, பொருளாளர் சாதிக் பாஷா, ஆலோசகர் குலசேகரன், ஆம்பூலன்ஸ் தாஜ் மற்றும் உல்லத்தி ஊராட்சியைச் சேர்ந்த தூய்மை காவலர்கள், பொதுமக்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்க ஓட்டுநர்கள் உட்பட 200_க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். இதில் தலைகுந்தா முதல் கல்லட்டி சாலை, தலைகுந்தா முதல் கூடலூர் சாலை மற்றும் ஊட்டி சாலை என மூன்று சாலைகளிலும் 3 அணிகளாக சென்று குப்பைகளை சேகரித்து அப்பகுதியை சுத்தம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்