முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குசாவடிகளின் வரைவு பட்டியல் குறித்து ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் : கலெக்டர் கணேஷ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 2017 முன்னிட்டு வாக்குசாவடிகளின் வரைவுபட்டிகளின் மீதான அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் சு.கணேஷ். தலைமையில் நேற்று (04.04.2017) நடைபெற்றது.

 

கூட்டம்

 

 

இந்த அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்; துவக்கி வைத்து பேசியதாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளின் வரைவுப்பட்டியல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள கால அட்டவணையின் படி வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளின் வரைவுபட்டிகளின் மீதான அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நமது மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு 2253 வாக்குச்சாவடிகளும், நகர்புற பகுதிகளுக்கு 273 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2526 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதுடன் நகர்புற பகுதிகளுக்கு 1200 வாக்காளர்களுக்கு 1 வாக்குச் சாவடியும், ஊரக பகுதிகளுக்கு அதிகபட்சம் 1000 வாக்காளர்களுக்கு 1 வாக்குச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 663 ஒரு வார்டு வாக்குச் சாவடிகளும், 1590 இரு வார்டு வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஊரக பகுதிகளில் ஆண் வாக்குச் சாவடிகள் 36ம், பெண் வாக்குச் சாவடிகள் 36ம், அனைத்து வாக்காளர்கள் 2181 என மொத்தம் 2253 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நகர்பகுதிகளில் (8 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகள்) ஆண் வாக்குச் சாவடிகள் 53ம், பெண் வாக்குச் சாவடிகள் 53ம், அனைத்து வாக்காளர்கள் 167 என மொத்தம் 273 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து அதிகபட்சம் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியில் கட்சியினரின் கோரிக்கையான அதிக வாக்காளர்கள் உள்ள இடங்களில் கூடுதல் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் நமது மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியிடப்பட்டுள்ள வாக்குசாவடிகளின் வரைவு பட்டியல்களின் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 07.04.2017-க்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் எழுத்து பூர்வமாக மனு அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் பேசினார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார் (மா.ஊ.வ.மு), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) லதா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கருப்பையன் (அ.தி.மு.க), நைனாமுகமது (தி.மு.க) இப்ராஹிம் பாபு (காங்கிரஸ்), சுப்பிரமணியன் (பா.ஜ.க),நேதாஜி சீனிவாசன் (தே.மு.தி.க), ராமச்சந்திரன்(சி.பி.ஐ), சாகுல்ஹமீது (தே.வா.கா) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்