முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கருத்தரங்கம் கலெக்டர் வா.சம்பத், தகவல்

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      சேலம்

 

சேலம் மாவட்டத்தில் மார்ச் 2017ல் தேர்வு எழுதியுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கருத்தரங்கம் சேலம் மாவட்டத்தில் 6.04.2017 அன்று நடைபெறுகிறது இது குறித்து கலெக்டர் வா.சம்பத், தெரிவித்ததாவது:மார்ச் 2017ல் தேர்வு எழுதியுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கருத்தரங்கம் சேலம் மாவட்டத்தில் 6.04.2017 அன்று நடைபெறுகிறது ஆத்தூர் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேவியாக்குறிச்சியிலும், கெங்கவல்லி மற்றும் தலைவாசல் ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு ஸ்ரீகைலாஷ் மகளிர் கல்லூரி, தலைவாசலிலும், வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு ஏ.வி.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி, ராமலிங்கபுரத்திலும், சேலம் நகர்புறம், சேலம் ஊரகம் ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு ஏ.வி.எஸ் பொறியியற் கல்லூரி, அம்மாபேட்டை, சேலத்திலும், ஏற்காடு ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏற்காட்டிலும், பனமரத்துப்பட்டி ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, மல்லூரிலும் நடைபெறவுள்ளது. மேலும் 07.04.2017 அன்று நங்கவள்ளி மற்றும் தாரமங்கலம் ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, நங்கவள்ளியிலும், காடையாம்பட்டி மற்றும் ஓமலூர் ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு நரசுஸ் சாரதி பொறியியற் கல்லூரி, பூசாரிப்பட்டியிலும், கொளத்தூர் மற்றும் மேச்சேரி ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு காவேரி பொறியியற் கல்லூரி, மேச்சேரியிலும், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி வீரபாண்டி ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு நாலேஜ் தொழில்நுட்பக் கல்லூரி, காகாபாளையத்திலும், சங்ககிரி மற்றும் எடப்பாடி ஒன்றிய பள்ளி மாணாக்கர்களுக்கு ஸ்ரீ சண்முகா பொறியியற் கல்லூரி, புள்ளிப்பாளையத்திலும் நடைபெறவுள்ளது. கருத்தரங்கில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, தொழில் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்பு குறித்தும் தொழில் முனைவோருக்கான ஆலோசனை குறித்தும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கருத்துரை கருத்தரங்கமானது காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ளது. மாணாக்கர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது இந்த வாய்பினை அனைத்து மாணாக்கர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்