முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வாரச் சந்தையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் வீடியோ படக்காட்சிகள் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக்கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன், முதலில் ஐம்பது சதவீத மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்வு, மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை இரு மடங்காக உயர்வு மற்றும் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபானக் கடைகளில் ஏற்கனவே மூடப்பட்ட 500 மதுபானக் கடைகளோடு கூடுதலாக 500 கடைகளை மூடவும் ஆணை ஆகிய 5 முக்கியத் திட்டங்களில் கையெழுத்திட்டார்கள். மேலும் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இப்புகைப்படக் கண்காட்சியினை சந்தைக்கு வருகை தந்த பொதுமக்கள் 1500க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை தெரிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) ஜனார்த்தனன் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்