முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிசெல்லா மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் : கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 6 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி , தலைமையில்; நடைபெற்றது.

கணக்கெடுப்பு

 

 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது.

 

"நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஒன்றியுங்களில் உள்ள அனைத்து குடீயிருப்புப் பகுதிகளிலும் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் 0 முதல் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளை விடுபடாமல் கண்டறிதல் வேண்டும். இக்கணக்கெடுப்பு பணியில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள்; மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று வழங்கி அக்குழந்தைகள் பயன்பெறுதலை உறுதி செய்தல் வேண்டும். மேலும் குழந்தைகள்; இடைநிற்றலுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இருத்தல் வேண்டும். கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனுடைய குழந்தைகள்; மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயனடைந்துள்ளனரா எனவும் அடையாள அட்டை பெறாத குழந்தைகளுக்கு புதிய அடையாள அட்டை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரிடமிருந்து பெற்று வழங்குதல் வேண்டும். மேலும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட குழந்தைகள்; தொடர்ந்து கற்றலில் ஈடுபட உகந்த வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தி தருதல் வேண்டும். இக்கணக்கெடுப்பில் தொழிலாளர் நலத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள, குழந்தைகள்; நலத்துறை, ஆரம்ப சுகாதார செவிலியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து செயல்படுதல் வேண்டும்" என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.கஸ்தூரிபாய், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் அ.பீட்டர் பிரான்சிஸ், அனைத்து துறை அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள,; வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்