முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் சிறையிலிருந்து விடுதலையான பாம்பன் மீனவரின் குடும்பத்தினரை பா.ஜ.கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு.

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேஸ்வரம்,-  ஈரான் சிறையிலிருந்து விடுதலையான பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவரின் குடும்பத்தினரை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.கட்சியின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து மீனவர் விடுதலையானது குறித்து விபரம் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் உள்பட கன்னியாகுமாரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் பக்ரைன் நாட்டில் தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில் அந்நாட்டிலிருந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ராஜ்குமார் உள்பட கன்னியாகுமாரி பகுதியை சேர்ந்த 14 பேர் மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் வைத்து ஈரான் நாட்டு கடற்படையினர் கைது செய்து ஈரான் சிறையில் அடைத்தனர்.இது குறித்து  தகவலறிந்த மீனவர்களின் குடும்பத்தினர்கள் மாநில அரசு மூலம் மத்திய அரசியிடம் மீனவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து வந்தனர்.அதன் பேரில் மத்திய அரசு முயற்ச்சியில் சிறையிலிருந்து வந்த பாம்பன் மீனவர் ராஜ்குமார் உள்பட கன்னியாகுமாரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் என 14 மீனவர்களையும் 5 மாதத்திற்கு பிறகு திங்கள் கிழமை ஈரான் அரசு விடுதலை செய்தது. இதனையொட்டி மீனவர் விடுதலையானது குறித்து பா.ஜ.கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன்,மாவட்ட மீனவர் அணித்தலைவர் முனியசாமி,துணைத்தலைவர் குமரேசன்,செயலாளர் சின்னக்கருப்பையா, பா,ஜ,கட்சியின் ராமேசுவரம் மீனவர் அணியின் நகர் தலைவர் ஜூட்ராஜா ஆகியோர்கள் செவ்வாய்க்கிழமை பாம்பன் பகுதியிலுள்ள மீனவர் ராஜ்குமார் வீட்டிற்கு  நேரில் சென்று ராஜ்குமார் மனைவியுடம் விடுதலையானது குறித்து தகவல் தெரித்தனர்.பின்னர் மீனவர்களை விரைவில் பாம்பன் பகுதிக்கு அழைத்து வரவும்,மீனவரின் வாழ்வாதர முன்னேற்றத்திற்கும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்