முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காட்டில் மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி நடைப்பெறும் படகு சவாரி : திண்டுக்கல் இளைஞர் பலி

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      சென்னை

பழவேற்காடு பகுதிக்கு படகு சவாரி மூலம் முகத்துவாரம் சென்ற திண்டுகல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம்,வெள்ளகுண்டாவரம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் மாரிமுத்து வயது 27 என்பவர் தனது நண்பர்களுடன் படகு சவாரி செய்தார்.ஏரியில் குளித்தவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பலியானார்.இது குறித்து திருப்பாலைவனம் காவல்துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

 

பொன்னேரி வட்டம் பழவேற்காடு பகுதியானது கடற்கரையை ஒட்டிய பகுதியாகும்.இங்கு மீன் பிடி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்ய ஏதுவான பகுதியாகும்.மேலும் படகு சவாரிக்கு ஏற்ற பொழுதுபோக்குக்கு உகந்த இடமாகும்.

 

இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஒரு சுற்றுலா மையமாகவும் இது விளங்குகின்றது. ஆனால் போதிய பாதுகாப்பு இல்லாத படகு சவாரினால்

கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை சுமார் இருநூற்றுக்கும் அதிகமானோர் படகு விபத்துகளில் பலியாகினர்.1984 ஆம் வருடம் பேண்டு வாத்தியக்காரர்கள் 9 பேர் பழவேற்காடு ஏரியில் படகு விபத்தில் பலியானார்கள்.1986 ஆம் வருடம் ஆந்திராவிற்க்கு அரிசி ஏற்றிச்சென்ற 6 பேர் பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து பலியானார்கள்.1995 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரிலிருந்து படகு சவாரி செய்த 16 பேர் முகத்துவாரம் அருகே படகு கவிழ்ந்து் பலியானார்கள்.அதன்பின் படகு சவாரி முற்றிலும் தடை செய்யப்பட்டது.2011 ஆம் வருடம் கும்மிடிப்பூண்டியிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் முகத்துவாரம் அருகே படகு கவிழ்ந்து பலியானார்கள்.பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக தற்போது வரை பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகின்றன. படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்த போதும் இது போன்ற படகு விபத்துகளுக்கு சுற்றுலா பயணிகளும்,சிறு தொகைக்கு ஆசைப்படும் படகு ஓட்டுநர்களுமே காரணம் ஆவர்.சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதை பல்வேறு அறிவிப்புகள் வழியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் அத்தடை மீறி படகு சவாரி செய்வதே இதற்கு காரணமாகும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்