முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடான உணவுப்பொருட்களை பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது.

எச்சரிக்கை

 

 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

 

கரூர் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை தரமாக வழங்கிட 8 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 2 நகராட்சிகளில் தலா 1 அலுவலர் என்று 10 அலுவலர்கள் பணிபுரிந்து மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக, அனைத்து உணவு வணிகர்களும் உணவுப்பொருள் கையிருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். காலாவதி தேதி அருகிலுள்ள உணவுப்பொருட்களை முதலில் விற்பனை செய்வதை முறையே பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொட்டலம் இட்ட உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி, தயாரிப்பாளர் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யும் பொழுதும் பில் வாங்க வேண்டும். மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் பாலித்தீன் பைகளில் சூடான உணவுப் பொருட்கள் வழங்கக்கூடாது. அரசினால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. செய்தித்தாள்களை பயன்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுவதற்கோ, கையாள்வதற்கோ பயன்படுத்தக்கூடாது. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டை பெட்டிகளையும், உணவுப்பொருள் கையாளும் பொழுது பயன்படுத்தக்கூடாது. பணியாளர்களுக்கு மருத்துவச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு குறிப்பிடும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு பெற வேண்டும்.

மேலும், உரிமம் மற்றும் பதிவு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரையோ அல்லது கீழே குறிப்பிட்டிருக்கும் மாவட்ட அலுவலகத்தையோ அணுகலாம்.

நியமன அலுவலர்,

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை,அறை எண் 6, இரண்டாவது தளம்,இணைப்புக்கட்டடம்,

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்,கரூர் மாவட்டம்.தொலைபேசி எண்:04324-255347மின்னஞ்சல் எண் : [email protected]வாட்ஸ்ஆப் எண் : 9868686868

என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஸ், மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.மீனாட்சி சுந்தரம், நகர்நல அலுவலர் ஹேமசந்த் காந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பா.தங்கமணி, உணவகங்கள் சங்க செயலாளர் எம்.ஜி.வேலவன், உணவு வணிகர்கள் சங்கத்தலைவர் வி.ஆர்.கந்தசாமி, குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் வி.ஆர்.சண்முகம், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கே.சொக்கலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் டி.எஸ்.துரைமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சா.வசந்தகுமாரி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பெ.ராமமூர்த்தி(பொ), ந.பாண்டி, வெ.சிவலிங்கம், பெ.சுப்பிரமணியன், சோ.கண்ணன், பெ.ராமமூர்த்தி, வீ.மாரிவேல், க.பாலமுருகன், ச.கருப்பையா, மு.ரமேஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்