முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யா வித்யாலயா பள்ளியில் 12வது விளையாட்டு விழா

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      விருதுநகர்
Image Unavailable

  ராஜபாளையம். - ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் 12-வது ஆண்டு விளையாட்டு விழா  பள்ளித்தாளாளர் திரு.குமரேசன் தலைமையில் பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி திரு.அரவிந்த்  சத்யா உயர்நிலைப்பபள்ளி முதல்வரும் , ஆலோசகருமாகிய  திரு. பாரதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  சிறப்பு  விருந்தினர்களாக   இராஜபாளையம் ரோட்டரி கிளப் தலைவர். திரு. து. ஆனந்த் , அரசு மருத்துவரும் ,மருத்துவ அதிகாரியும் ஆகிய திரு. பாபுஜி,   இராஜபாளையம் ரோட்டரி கிளப் செயலாளர் திரு. ரவிசங்கர் ,பள்ளி மேனேஜிங் டிரஸ்டி  டாக்டர். திருமதி. சித்ராகுமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி திரு.அரவிந்த் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு  விருந்தினர் திரு. ஆனந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஒலிம்பிக்கொடியை டாக்டர் திரு. பாபுஜி ஏற்றி வைத்தார்.
 பள்ளிக்கொடியை பள்ளி மேனேஜிங் டிரஸ்டி  டாக்டர் . சித்ரா குமரேசன் ஏற்றி வைத்தார்.  பேண்டு வாத்தியம் முழங்க மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளித்தாளாளர் சிறப்பு விருந்தினர்களை கௌரவிக்கும் பொருட்டு நினைவு பரிசினை வழங்கினார். பள்ளி ஆண்டறிக்கையை சத்யா உயர்நிலைப்பள்ளி முதல்வர் திரு. பாரதி வாசித்தளித்தார்.   மாணவர்களின் உடற்பயிற்சி கலைகள் பார்ப்போரின் கண்களை கவர்ந்தன. 
கராத்தே, யோகா,  சிலம்பம்  போன்ற சாகச நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்திக்காட்டினார்கள். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விருந்தினர்கள் பள்ளிமாணவர்களை பாராட்டியும் சில அறிவுரைகளையும் வழங்கினார்கள்.  நிகழ்ச்சியை ஆசிரியைகள்  திருமதி சுமதி மற்றும் ஆசிரியை செல்வி. மு.சு.ஸ்ரீவித்யா தொகுத்து வழங்கினார்.  விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மெடல்களும்  பரிசாக வழங்கப்;பட்டது. ஆசிரியர் திரு. ஜெயப்பிரகாசம்  முடிவில் நன்றியுரை ஆற்றினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி ஒருங்கிணைப்பாளர் திருமதி. அமுதா தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி ஷர்மிளா, திருமதி சத்யா ஆகியோர் முன்னிலையில் அனைத்து ஆசிரியைகளும் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவில் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்