முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த ஆலோசனை

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      தஞ்சாவூர்

பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பாக ஆலோசனை வழங்க கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 06.04.2017 அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தஞ்சாவூர் நகர பகுதி மாணவர்களுக்கு பாரத் கலை மற்றும்அறிவியல் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை நகர பகுதி மாணவர்களுக்கு ஏனாதி இராஜப்பா கல்லூரியிலும், கும்பகோணம் நகர பகுதி மாணவர்களுக்கு தாராசுரம் கே.எஸ்.கே பொறியியல் கல்லூரியிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

06.04.2017 அன்று பத்தாம் வகுப்பு தஞ்சாவூர் நகர பகுதி மாணவர்களுக்கு டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியிலும், கும்பகோணத்தில் ஸ்ரீசரஸ்வதி பாடசாலா மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு ஸ்ரீ கயிலை மாமுனிவர் சதாபிஷேக திருமண அரங்கிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

07.04.2017 அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு பரிசுத்தம் பொறியியல் கல்லூரியிலும், 10ம் வகுப்பு பயிலும் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு தஞ்சாவூர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

 

பின்வரும் ஒன்றியங்களில் பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடைபெறும் இடங்கள் வருமாறு: பூதலூர் ஒன்றியம் - செங்கிப்பட்டி ரம்யா சத்யநாதன் பாலிடெக்னிக் கல்லூரி. திருவையாறு ஒன்றியம் - திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியிலும், மதுக்கூர் ஒன்றியத்தில் மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், பேராவூரணி ஒன்றியத்தில், பேராவூரணி ளு.சூ.ஏ திருமண மண்டபத்திலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரியிலும், திருவோணம் ஒன்றியத்தில் திருவோணம் நவீனா மேல்நிலைப் பள்ளியிலும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரத்தநாடு லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரத்தநாடு சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கும்பகோணம் ஒன்றியத்தில் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியிலும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் ஆவணியாபுரம் கிரஸன்ட் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் ஒன்றியத்தில், பாபநாசம் ஆர்.டி.பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் அம்மாப்பேட்டை ரெஜினாசீலி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடைபெற உள்ளது.

திருவிடைமருதூர் ஒன்றியத்தில் ஆடுதுறை ஸ்ரீ கே.ஜி. எஸ் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் ஒன்றியத்தில் இராஜகிரி தான்ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் அம்மாப்பேட்டை உக்கடை அப்பாவுத் தேவர் மேல்நிலைப் பள்ளியிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்தக் கருத்தரங்கு கூட்டத்தில் மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்களின் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு குறித்து அறிந்து பயன்பெறலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago