முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நீதியரசர் செல்வம் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

  மதுரை.- மதுரை வைகை ஆறு சுற்றுச்சாலை விரகனூர் பாலம் வண்டியூரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுத்தும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்கொ.வீர ராகவ ராவ், முன்னிலையில் மாண்புமிகு நீதியரசர்எ.செல்வம் அவர்கள் இன்று (05.04.2017) தொடங்கி வைத்தார்.
 இப்பணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்   செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
 சுற்றுப்புற சூழலுக்கு சீர்கேடாய் விளங்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு;ள்ளது. அதனடிப்படையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சீமைக் கருவேலமரங்கள் அகற்றும் பணி மிகத்துரிதமாக நடைபெற்றுவருகிறது. நமது மாவட்டத்திலுள்ள 3,75,000 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் தரிசாக உள்ள 1,75,000 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் தற்பொழுது அகற்றப்பட்டு வருகிறது.  இப்பணிகள் வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு வருகிறது.  இதில் பொதுமக்களின் பங்களிப்பாக வரப்பெற்ற ரூ.10 இலட்சம் தொகையானது தலா ரூ.2 இலட்சம் வீதம் சிவகங்கை, இராமநாதபரம் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதற்காக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்களுக்கு சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.  சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாததற்காக இதுவரை 14,187 நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதில் 3000 நபர்கள் தங்கள் சொந்தமான நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றியுள்ளனர்.  சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாததற்காக அபராத தொகையாகயாக ரூ.8.7 இலட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
 இதுவரை தங்களது நிலங்களில் உள்ள சீமைக்கருவேலமரங்களை அகற்றப்படாதவற்களின் நிலங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான தொகையை இரட்டிப்பாக சம்மந்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களிடமிருந்து வசூல்செய்யப்படும்.  மேலும் மதுரை மாவட்டத்தை சீமைக்கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதியரசர்கள்டி.எஸ்.சிவஞானம்,பி.என்.பிரகாஷ்,சி.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் திருமதி.சு.மலர்விழி , (சிவகங்கை), முனைவர்.ச.நடராஜன், (இராமநாதபுரம்), மதுரை மாநகராட்சி ஆணையர்சந்தீப் நந்தூரி,  கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி.ரோகிணி ராம்தாஸ்,  மேலூர் வருவாய் கோட்டாட்சியர்பெனடிக்தர்மராய், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள்செல்வராஜ் மற்றும்மருது பாண்டியன், வட்டாட்சியர்கள்முருகைய்யன்   (மதுரை தெற்கு),கருப்பையா (மதுரை கிழக்கு) உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்