முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் முகாம்:கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டத்திலுள்ள 20 ஒன்றியங்களிலும் இன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அத்துறையின் இயக்குநர் உதயசந்திரன், அறிவுரைக்கேற்ப 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் வேலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் முகாமினை ஓட்டேரியில் இயங்கி வரும் செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்து பேசியதாவது:-10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளாகிய உங்களுக்கு தற்போதிய வயது தான் எவ்வித கவலைகளும் இன்றி கல்வி கற்கவும், உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் மிகச்சரியான வயது. ஆகவே மாணவ மாணவிகள் உங்களின் மனதில் ஒளிந்திருக்கும் மகாசக்தியினை ஒருமுகப்படுத்தி தாழ்வு மனப்பான்மையை அகற்றி ஆக்கப்பூர்வமான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் தான் உங்களுடைய வாழ்க்கையினை தீர்மானிக்கக்கூடிய பதிலாக அமையும். நீங்கள் என்னவாக வளர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதன் விதையினை உங்கள் உள்மனதில் பதித்து அதற்கான முயற்சிகளை தற்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும். 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் உயர்கல்வி கற்றிட என்னென்ன பிரிவுகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வழிவகைகள், தமிழக அரசு வழங்கும் மாணவர்களுக்கான ஊக்கப்பரிசுகள், ஐ.டி.ஐ பயிற்சி, பாலிடெக்னிக் படிப்புகள், மாணவர்களுக்கான தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகளும், போட்டித் தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சிகள், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு மீண்டும் தேர்வினை எழுதுவதற்கான வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் அடங்கிய கையேடுகள் இங்கு பங்கேற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டினை முழுமையாக படித்து உங்களுடைய சூழலுக்கு ஏற்ப சரியான அடுத்தக் கட்ட நடவடிக்கையினை தேர்ந்தெடுத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கலெக்டர் அவர்கள் மாணவ மாணவிகளிடம் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி, மாவட்ட முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேனிலை) ராஜன், செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முனைவர்.விஜயகுமார், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பஷீர் அகமது, முதுநிலை விரிவுரையாளர் முனைவர்.மணி, உதவி திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்