முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கத்தில் கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

செங்கத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிகல்வித்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் பிரசாந் மு.வடநேரே உத்தரவுபடியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வழிகாட்டுதலுடனும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த ஆலோசனைக்கருத்தரங்கம் நடைபெற்றது. செங்கம் கணேசர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாகரன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியினை வாழ்த்தி திருவண்ணாமலை மாவட்ட தமிழ்சங்க தலைவர் எக்ஸ்நோரா இந்திரராஜன் பேசினார் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அரசு கல்லுரி உதவி பேராசிரியர்கள் ரவிசந்திரன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேற்கொண்ட என்ன படிக்கலாம் என்பதை எல்சிடி பட விளக்கங்களுடன் பேசினர். நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சேலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் ஆலோசகர் சரவணன் ஆண்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் கண்ணக்குருக்கை அருணை வித்யா கலை அறிவியல் கல்லூரி சார்பில் முதல்வர் ராஜசேகர் திருவண்ணாமலை எஸ்கெபி பொறியியல் கல்லூரி சார்பில் பேராசிரியர் ராதிகா கீழ்பென்னாத்தூர் கல்வியியல் ஆராய்ச்சி மைய நிர்வாகி ம.பிரியா திருவண்ணாமலை பாலாஜி கேட்டரிங் கல்லூரி தலைவர் சிவசங்கர் மற்றும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி தண்டராம்பட்டு பாரத் வித்யாமந்திர் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகிகளும் பேசினர். முடிவில் நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோலாப்பாடி கண்ணக்குருக்கை அரட்டவாடி இளங்குண்ணி பரமனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்