பல்வேறு திட்டப் பணிகள் குறித்து குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      கடலூர்

கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்  தலைமையில்  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் , அங்கன்வாடி மையங்களில் மீசில்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி, வைட்டமின்-ஏ, வயிற்றுப்பூச்சி நீக்க மாத்திரைகள் விநியோகம் மற்றும் போலியோ சொட்டுமருந்து ஆகிய சுகாதாரப் பணிகளை குழந்தைகளுக்கு சிறப்பாக அளிக்கப்பட்டது போல அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தரமான முன்பருவ கல்வியும், மதிய உணவு வழங்குவதை கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் 0-60 மாத குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து இப்பணியினை 30.04.2017க்குள் முடித்திட கலெக்டர்  தெரிவித்தார். மேலும் கலெக்டர் , பயனாளிகளுக்கு வழங்கப்படும் இணை உணவின் முக்கியத்துவம் குறித்தும், சுகாதாரம் குறித்தும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்திடும்படி அறிவுரை வழங்கினார். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை மருத்துவ பரிந்துரை செய்தும், தனி கவனம் செலுத்தி வளர்ச்சியினை முன்னேற்றம் செய்ய அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில், பயிற்சி பெறுவதற்காக கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள இந்திய அயல்நாட்டுப்பணி அலுவலர்கள் செல்வி கே.ஸ்ரீரஞ்சனி ஐ.எப்.எஸ், ரிஷிகேஷ் சுவாமிநாதன் ஐ.எப்.எஸ்,  செல்வி ஜெ.ஜோஸ் ஆண்ரூ ஹெல்தா ஐ.எப்.எஸ்,   விஜயகுமார் சக்திவேல் ஐ.எப்.எஸ், மாவட்ட திட்ட அலுவலர் (பொ) கோ.அன்பழகி, வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: