முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மெரைன் கல்லூரியில் தேசிய கடல்சார் தினவிழா

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

கோவையில் உள்ள மெரைன் கல்லூரியில் 54-வது கடல்சார் தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்தியவில் கடந்த 1919-ம் வருடம் ஏப்ரல் 5-ந் தேதி சிசின்டியா ஸ்டீம் நேவிகேசன் நிறுவனத்தால் கடல்சார் வாணிபம் தொடங்கப்பட்டது.அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் அந்த நாளை கடல்சார் தினமாகக் கொண்டாடப் படுகிறது.சுதந்திரத்துக்குப் பிறகும் நமது கடல் வாணிபம் புதிய உத்திகளோடு தொடந்து சிறப்பாக இயங்கி வருகிறது.தற்போது பன்னாட்டு வர்த்தகத்தில் 77 சதவிகிதம் கடல் மார்க்கமாகவே நடக்கிறது.உலகளவில் இந்தியத் துறைமுகங்கள் சரக்குகளை கையாளும் தரவரிசையில் 17-லது இடத்தைப் பெற்றுள்ளது.

கோவை மைலேரிபாளையத்தில் உள்ள மெரைன் கல்லூரி 54-வது தேசிய கடல்சார் தனவிழாவினைக் கொண்டாடியது.இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையாளர் எஸ்.சரவணன் கலந்து கொண்டு பேசினார்.மேலும் நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் எஸ்.ஐ.நாதன் மற்றும் முதல்வர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்புஇ உறுதிமொழி ஏற்புஇ அறிவு மற்றும் உடல்சார் திறன் போட்டிகள்இ கருத்தரங்குஇ கலை நிகழ்ச்சிகள் நடந்தன.மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஓயோ நிறுவனம் ஓலா மணியுடன் ஒப்பந்தம்

கோவை, ஏப் 7  – பிரபல ஹோட்டல் நெட்வொர்க்காக திகழும் ’ஓயோ’, தங்களது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் வசதியை எளிதாக மேற்கொள்ள உதவும் வகையில், முக்கியமான ஒப்பந்தமொன்றை, பிரபலமான உள்ளூர் போக்குவரத்திற்கான மொபைல் அப்ளிகேஷனான ’ஓலா மனியுடன் மேற்கொண்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தமானது, ’ஒயோ’ வாடிக்கையாளர்கள் இனி ஒரே நொடியில் ஹோட்டல் ரூம்களுக்கான கட்டணத்தை ’ஓலா மனி’ மூலம் செலுத்தமுடியும். இதன் மூலம் இணையம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் முன்பதிவுக்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியும்.

’ஒயோ’ மற்றும் ’ஓலா மனி’ இடையேயான ஒப்பந்தம் குறித்து, ஓயோவின் வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணைத் தலைவர் விஷால் ஜெய்ன்  பேசுகையில், ‘’ஒயோ வாடிக்கையாளர்கள் எந்தவிதமான பிரச்னைகள், இடர்பாடுகள் இல்லாத வகையில் சுலபத்தில் முன்பதிவு செய்து தங்கும் அனுபவத்தை தொழில்நுட்பங்கள் மூலம் வழங்குவதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மிகபெரும் டிஜிட்டல் வாலெட்களில் முன்னணியில் இருக்கும் ‘ஓலா மனி’ உடனான எங்களது ஒப்பந்தம், வாடிக்கையாளர்கள் சுலபமாக கட்டணங்களைச் செலுத்துவதற்கான வசதியை அளிக்கும். மூன்று நொடியில் ஹோட்டலில் தங்குவதற்கான முன்பதிவு செய்ய முடிவதுடன், அங்கு செல்வதற்காக ஓலா வாடகை வாகனத்தையும் முன்பதிவு செய்ய முடியும். இது வாடிக்கையாளர்கள் எவ்வித  இடர்பாடுகளும் இல்லாமல், மனநிம்மதியுடன் சென்று தங்குவதற்கான அருமையான அனுபவத்தை அளிக்கும்’’ என்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்