முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது.

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      திருப்பூர்

திருப்பூர்  மாவட்டம், அவிநாசி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்    பணிகள்  மற்றும்  குடிநீர்  விநியோகம்  குறித்து  அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி,   முன்னிலையில்   தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் ப.தனபால்  தலைமையில்  நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 ஊராட்சிகள் மற்றும் அவிநாசி, திருமுருகன்பூண்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு  வரும் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சிப்பணிகள் குறித்தும்   தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர்  துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், இப்பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்படுவதும் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி சீரான முறையில் குடிநீர் கிடைப்பதற்கு அனைத்து அலுவலர்களும் துரிதமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு  தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர்  அறிவுறுத்தினார்கள்.

    இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) மைக்கேல், செயற்பொறியாளர்(ஊ.வ) ஆர்.பிரேம்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) பழனியம்மாள், அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தன்,  அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அவிநாசி,திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago