முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில்,     நாகர்கோவில், ரோட்டரி கம்ய+னிட்டி ஹாலில்,  குடிநீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி    நடைபெற்றது.கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், நாகர்கோவில், ரோட்டரி கம்ய+னிட்டி ஹாலில், குடிநீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து, கல்லூரி மாணவ, மாணவியர்கள் (பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஜேம்ஸ் செவிலியர் பயிற்சி பள்ளி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி, ஸ்ரீஐயப்பா மகளிர் கல்லூரி, சன் பொறியியில் கல்லூரி, உதயா கலை, அறிவியில், தொழில் நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரி) பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.         இந்நிகழ்ச்சிசியில், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையேற்று, பேசும்போது தெரிவித்ததாவது:-நமது மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட, தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்துள்ளதால், பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் -1 மற்றும் சிற்றார் -2 ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளது.  நமது மாவட்டத்தை பொறுத்தவரை, 25 ஆண்டுகளுக்கு இல்லாத குடிநீர் பற்றாகுறை தற்போது ஏற்பட்டுள்ளது. ப+மியை பொறுத்தவரை, 71 சதவீதம் தண்ணீர் மற்றும் 29 சதவீதம் நிலம் நிறைந்துள்ளது.  இதில்,             96.5 சதவீதம் கடல் நீராகும். மீதியுள்ள 3.5 சதவீதத்தில் 1.5 முதல் 1.7 சதவீதம் வரை குடிநீருக்காக நாம் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம்.  தமிழ்நாடு முதலமைச்சர் , குடிமராமத்து முறையில், குளங்களை புனரமைக்கப்படும் என்ற சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இதன் மூலம், விவசாயிகள் மிகவும் பயனடைவார்கள்.  மேலும், அவர்களின் வாழ்வாதாரம் உயர, தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இதுபோன்ற அரசு, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, செயல்படுத்தி கொண்டிருந்தாலும், மக்களாகிய நாம் குடிநீரினை எவ்வாறு சிக்கன படுத்தி கொள்வதோடு, பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும்.  மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள், நமது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் குடிநீர் அவசியத்தை குறித்து, எடுத்து கூறி, விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்,  மாயா சவான்,  அஞ்சனா தர்மராஜன்,  பார்வதி விஜயகுமார்,  விஜயகுமாரி,  பிரமிளா தேவதாஸ், மரு. கே.விஜயகுமார்,  ஷாஜஹான்,  ஜேசயா வில்லவராயர்,  கே. ராஜகோபாலன், மரு. ஷேக் சலீம்,  எஸ். கிருஷ்ணன், கஸ்தூரிபாய் மாதர்சங்கம், சுரக்ஷா பெண்கள் பாதுகாப்பு சங்கம், பைரவி பவுண்டேசன் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago