முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்யா - ஈரான் தான் காரணம் : ஜெர்மனி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பெர்லின்  - சிரியாவில் நடைபெற்ற விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்யா,ஈரான் நாடுகள் தான் காரணம் என ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.

ரசாயன தாக்குதல்
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முன்தினம் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

100 பேருக்கும் ....
இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெர்மன் குற்றச்சாட்டு
விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிரியாவில் நடைபெற்ற விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்யா,ஈரான் நாடுகள் தான் காரணம் என ஜெர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்