முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டியால் பணவீக்க பாதிப்பு இருக்காது : மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதி

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் நாட்டில் பணவீக்க பாதிப்பு இருக்காது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் நேற்று உறுதி அளித்தார்.

பாதிப்பு இருக்காது
பாராளுமன்ற லோக்சபையில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான 4 துணை மசோதாக்களை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது. தற்போதுள்ள நிலைப்படியே வரி விதிப்பு இருக்கும் அதனால் எந்த பணவீக்க பாதிப்பும் இருக்காது என்று  உறுதி அளித்தார்.

ஒரே வரி விதிப்பு முறை
இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையையும் ஒரே சந்தை முறையையும் கொண்டு வரும் வகையில் ஜி.எஸ்.டி இருக்கும். இந்த 4 துணைமசோதாக்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் மாநிலங்களில் ஒவ்வொரு மசோதாவாக நிறைவேற்றப்படும். ஜி.எஸ்.டி விதிப்பில் செய்யப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் வகையில் ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதுவும் மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 4 துணைமசோதாக்களும் எல்லோருக்கும் பயன் அளிக்கக்கூடிய புரட்சிகரமானதாகும். ஜி.எஸ்.டி கவுன்சிலில் மாநிலங்களின் இறையாண்மை தன்மையும் இணையும்படி மத்திய அரசு செய்துள்ளது என்றும் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

லோக்சபையில் தாக்கல்
இந்த 4 துணைமசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது லோக்சபையில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பல கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். மத்திய சரக்கு மற்றும் சேவை மசோதா 2017, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 2017, சரக்கு மற்றும் சேவை நஷ்டஈடு வழங்கும் மசோதா 2017, யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை மசோதா 2017 ஆகிய 4 மசோதாக்களும் லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டன. கலால், சுங்கவரி மற்றும் கூடுதல் சுங்க வரி, சர்வீஸ் வரி விதிப்புக்கு பின்னர் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க மத்திய அரசுக்கு மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அதிகாரம் அளிக்கிறது. மாநிலங்களுக்கிடையே சரக்கு சேவை வரி விதிப்புக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதானது மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மாநிலங்களுக்கும் விற்பனை வரி விதிப்பு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அருண்ஜெட்லி மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்