முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2055 - 2060-ம் ஆண்டில் இந்து குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ‘2055-2060-ம் ஆண்டில் இந்து குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும்‘ என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறைவாக இருக்கும்
அமெரிக்காவை சேர்ந்த பியூ ஆராய்ச்சி கல்வி மையம் சமீபத்தில் உலகம் முழுவதும் மக்களின் பிறப்பு விகிதம் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் வருகிற 2055 முதல் 2060-ம் ஆண்டுவரை இந்து குழந்தைகளின் பிறப்பு விகிதம் வியப்பு அளிக்கும் வகையில் மிக குறைவாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

அதிகரிக்கும் வாய்ப்பு ...
2015-ம் ஆண்டுக்கு பிறகு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 2055 முதல் 2060-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களை விட முஸ்லிம் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிக அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசம் குறையும் ...
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையேயான குழந்தை பிறப்பு 60 லட்சம் மட்டுமே வித்தியாசம் இருக்கும். அதாவது 23 கோடியே 20 லட்சம் முஸ்லிம் குழந்தைகளும், 22 கோடியே 60 லட்சம் கிறிஸ்தவ குழந்தைகளும் பிறக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதம் ...
அதே நேரத்தில் 2055 மற்றும் 2060-ம் ஆண்டுகளில் 3 கோடியே 30 லட்சம் இந்து குழந்தைகள் மட்டுமே பிறக்கும். அது 2010 மற்றும் 2015-ம் ஆண்டுகளை விட மிக குறைவாகும். தற்போது உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் மதம் உள்ளது. என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி 2010 முதல் 2015-ம் ஆண்டு இடைவெளியில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 15 கோடி அதிகரித்துள்ளது.

70 சதவீதம் உயரும் ...
இதே நிலை நீடித்தால் 2055 முதல் 2060-ம் ஆண்டுக்குள் உலக முஸ்லிம்களின் மக்கள் தொகை 70 சதவீதம் உயரும். கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 34 சதவீதம் அதிகரிக்கும் இந்த நிலையில் உலக அளவில் இந்த இரு மதங்களும் சம அளவிலான மக்கள் தொகையுடன் திகழும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்