முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி தேசிய தரவரிசை பட்டியலில் சாதனை

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் நடத்தப்பட்ட தேசிய அளவில் கல்லூரிகளுக்கான தர வரிசை பட்டியலில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி சிறப்பானஇடம் பெற்று முன்னிலை வகிக்கிறது.

இந்த தரவரிசை பட்டியலிடும் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதில் இந்திய அளவில் சுமார் 3300 கல்லூரிகள் இடம்பெற்றன. இந்த கல்லூரிகளில் அனஐத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கல்லூரிகள், இந்திய தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இந்த தரவரிசை பட்டியலிடும் பணியில் கற்பித்தல், போதனை முறை, வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, வெளிவரும் பட்டதாரிகளின் உயர்நிலை, கல்லூரியின் சமுதாய நோக்கு மற்றும் கல்லூரி மீதான சமுதாயத்தின் மதிப்பீடு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2017ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் கடந்த 3ம் தேதி ஏப்ரல் மாதம் மனித வள மேம்பாட்டுத் துறையின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் தலைசிறந்த 100 பொறியியல் மற்றும் பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் சுமார் 3300 கல்லூரிகளின் தரங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த 100 கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் தன்னாட்சி பெறாத சுமார் 500க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி 2ம் இடம் பெற்றுள்ளது. மேலும் அனைத்து தமிழகபொறியியல் கல்லூரிகளில் தரவரிசையில் 4ம் இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழக அளவில் அனைத்து தேசிய தொழில்நுட்ப கல்லூரிகள், இந்திய தொழில் நுட்பக்கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வரிசையில் 15ம் இடம் பெற்றுள்ளது சிறப்பிற்குரியதாகும்.

இந்திய அளவில் 78ம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதில் அனைத்து தேசிய தொழில்நுட்ப கல்லூரிகள், அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்லூரிகள், அனைத்து நிகர்நிலை  பல்கலைக்கழகங்கள், அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இந்திய அளவில் இடம் பிடித்த இந்த நிகழ்வு பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும்.

1984ம் ஆண்டில் திண்டுக்கல்லில் கிராமப்புற மக்களுக்கு தரமான பொறியியல் கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.எஸ்.கோதண்டராமன் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியை துவக்கினார். 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது கல்லூரியில் 7 இளநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளும், 7 முதுநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்ட படிப்புகளும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற மேற்படிப்புகளும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்