முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் சொட்டுநீர் பாசன முறை : கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குவாகம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் சொட்டுநீர் பாசன முறையில் நடைபெற்றும் வரும் விவசாயிகளின் நிலங்களை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

 

நீர் பற்றாக்குறை

 

இவ்வாய்வின்போது, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையிலும் சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி வருங்காலத் தலைமுறைக்கு வளமான நீர்வள மோன்மையை விட்டுச்செல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் விவசாயத்தில் சிக்கனமாக நீரை செலவு செய்து இருமடங்கு உற்பத்தியும், மும்மடங்கு வருமானமும் பெற தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் காய்கறி பயிர்கள், மலர்கள், பழப் பயிர்கள், கரும்பு, சோளம் போன்றவைகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து தரப்படுகிறது.

அதன்அடிப்படையில், தோட்டக்கலைத் துறையின் மூலம் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், கூவாகம் கிராமத்தில் காமராஜ், தஃபெ.செல்லபெருமாள் என்பவர் 1.60 ஹெக்டேர் நிலத்தில் சொட்டுநீர் பாசன முறை பயன்படுத்தி முல்லை, கனகாம்பரம் பூக்கள் பயிரிட்டு சிறப்பான முறையில் விவசாயம் செய்து வருகிறார். சித்ரா கஃபெ.கலியபெருமாள் என்பவர் 1.46 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் சொட்டுநிர்; பாசன முறை பயன்படுத்தி எலுமிச்சை பயிரிட்டு சிறப்பான முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

மேலும், வேளர்ணமைத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், கூவாகம் கிராமத்தில் அன்புசெல்வி கபெ.அண்ணாதுரை மற்றும் பாரிவள்ளல் தபெ.சின்னதுரை ஆகியவர்கள் தலா 1.00 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டு சிறப்பான முறையில் விவசாயம் செய்து வருகிறார்கள். எனவே, விவசாய பெருமக்கள் இத்திட்டத்தினை அனைவரும் பயன்படுத்தி தண்ணீரை சிக்கனப்படுத்தி விவசாயத்தை பெருக்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது, தோட்டக்கலை துணை இயக்குநர் அன்புராஜன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியார் (வேளாண்மை) இளங்கோவன், உதவி இயக்குநர் (பொ) ஆண்டிமடம் சிவக்குமார் மற்றும் தோட்டக்கலை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்