முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மனசோர்வு விழிப்புணர்வு பேரணியை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட சுகாதார துறை மற்றும் மாவட்ட மனநல திட்டம் சார்பாக மன அழுத்தம் மற்றும் மனசோர்வு தொடர்பான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

          இப்பேரணியானது ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கி பிரப் ரோடு வழியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முடிவுற்றது. இப்பேரணியில் தன்வந்திரி, ஜேகேகேஎன், வேளாளர் செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ‘மன அழுத்தமா - மனம் திறந்து பேசுங்கள்,  உதடுகள் பேசட்டும் உள்ளங்கள் மலரட்டும், கதவைத் திற காற்று வரும், மனதைத் திறக்க மாற்றம் வரும், மனதை திடப்படுத்து மனச்சோர்வை கட்டுப்படுத்து, மனம் திறந்த பேச்சு, மனநோய் இல்லா வாழ்வு, மன வளக்கலை வளமாகும் கலை, தழுவு தழுவு அன்பைத் தழுவு விரட்டு விரட்டு மன அழுத்தத்தை விரட்டு, இன்பம் வந்தால் புத்துணர்ச்சி, துன்பம் வந்தால் மனத்தளர்ச்சி, மன வளத்தை காப்போம், மனித நேயத்தை வளர்ப்போம், மகிழ்ச்சியுடன் வாழ மன அழுத்தம் துற உள்ளிட்ட மனசோர்வு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சென்றனர்.

இப்பேரணியில் மாநகராட்சி ஆணையாளர்  சீனிஅஜ்மல்கான், இணை இயக்குனர் (நலப்பணிகள்) மரு.டி.கனகாசலகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.பெ.பாலுசாமி, துணை இயக்குனர் (தொழுநோய்) மரு.ரமாமணி, துணை இயக்குனர் (குடும்பநலம்) லதா, மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.லட்சுமி, உறைவிட மருத்துவ அதிகாரி எஸ்.என்.அரங்கநாயகி,  மன நல மருத்துவர்கள் மரு.ஏ.ஆனந்த குமார், மரு.எஸ்.கவிதா, மரு.எஸ்.ஆனந்த் மற்றும் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்