முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியின் சார்பில் பள்ளிகளுக்கு கணினி மற்றும் வீட்டு கழிப்பிடங்களுக்கு உபகரணங்கள்: கலெக்டர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

தூய்மை இந்தியா திட்டம் மற்றும் ஜி.வி.பள்ளி வளர்ச்சி திட்டத்தன் கீழ் விஐடி பல்கலைக்கழகத்தின் சார்பில் பள்ளிகளுக்கு கணினி மற்றும் வீட்டு கழிப்பிடங்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் வேலூர் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார்.விஐடி பல்கலைக்கழகத்தின் நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் மாநராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் கழிப்பிடங்கள் அமைக்க தேவையான உபகரணங்கள் மற்றும் ஜி.வி.பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் கல்லூரிகளுக்கு கணினி வழங்கும் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.விஐடியின் ராஜாஜி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி இணை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை உரையாற்றுகையில் மக்களுக்கான அடிப்படை தேவையில் முக்கியமானது கல்வியும் சுகாதாரமும் ஆகும். நாட்டில் மக்கள் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் தூய்மை இந்தியா திட்டத்தினை நாட்டின் பிரதமர் கொண்டு வந்து 2018ம் ஆண்டில் நாட்டில் கழிப்பிடம் இல்லாத வீடே இல்லை என்ற நிலையை உருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தின் வளர்ச்சியில் விஐடி பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்காக தூய்மை இந்தியா திட்டத்தில் வீட்டு கழிப்பிடங்களுக்கான உபகரணங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு கணினி வழங்குகிறேம். புறத்தூய்மைக்கு தண்ணிர் காரணமாக உள்ளது. நான் பல அரசு பள்ளிகளுக்கு சென்றபோது அப்பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள் பூட்டியிருந்தன. காரணம் கேட்டபோது தண்ணிர் இல்லாததே காரணம் என்று கூறினார்கள். மழை நீர் என்பது முக்கியமான சொத்து அதை சேகரித்து வைக்க வேண்டும் அதற்கு நீர் நிலைகள் தூர் எடுத்து ஆழப்படுத்தி பராமரிக்க வேண்டும். அதை நாம் முறையாக செய்ய தவறியதால் தான் சென்னையும் கடலூரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.முன்னேற்றத்திற்கு கல்வியும் சுகாதாரமும் அவசியம் கல்வி இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி அமைக்க முடியும். அரசு கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளித்து அதிக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் அது இல்லை அதனை செய்ய போதிய நிதி தேவை அதற்கு அரசு வருமானத்தை பெருக்க வேண்டும்.வருமானம் அதிகரிக்க எல்லோரும் ஒழுங்காக வரி செலுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது.நான் 50 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன் இப்போது தான் நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறி அதற்கான திட்டத்தினை கொண்டு வந்த முதல் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். மணித வாழ்க்கையில் 200,300 ஆண்டுகளுக்கு முன்பு பரட்சி ஒன்று ஏற்பட்டது அது மின்சார புட்சி இப்போது கணினி புரட்சி உருவாகியுள்ளது. தொழில் புரட்சியில் நாம் பின் தங்கி விட்டோம் ஆனால் கணினி புரட்சியில் முன்னேறி விட்டோம். எல்லோரும் கணினி அறிவு பெற வேண்டும் அதற்காக தான் விஐடி சார்பில் கணினி வழங்குகிறேம் என்றார்.நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விஐடி பல்கலைக்கழகத்தின் சார்பில் 300 வீடுகளுக்கான கழிப்பிட உபகரணங்கள் மற்றும் 9 பள்ளிகள் ஒரு கல்லூரிக்கு கணினிகளை வழங்கி பேசியதாவது:வேலூர் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளில் கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் 3 ஆண்டுகளில் இதை முடிக்க வேண்டும். இதில் 2016-17ம் ஆண்டில் 80916 கழிப்பிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக மாவட்டத்தில் கழிப்பிடம் இல்லாத வீடே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றார்.இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் டி.குமார் பங்கேற்று வாழ்த்தி பேசினார். முடிவில் பேராசிரியர் முனைவர் சி.ஆர்.சுந்தரராஜன் நன்றி கூறினார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago