முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியா - இஸ்ரேல் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

ஜெருசலேம்  - சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது.

பாதுகாப்பு அமைப்பு ...
இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் வழங்க முடிவு செய்தது. அதற்கான ஒப்பந்ததில் கையெழுத்திட்டதாக இஸ்ரேல் நாட்டின் விண்வெளி தொழிலகம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

நவீன ஏவுகணைகள் ...
மிகப் பெரிய அளவிலான இந்த ஒப்பந்தத்தில் நடுத்தர தூரத்தை குறிவைத்து தாக்கும் நவீன ஏவுகணை அமைப்புக்கான தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட இருக்கிறது. மேலும், நீண்ட தூரம் குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை அமைப்பிற்கான உபகரணங்களை ரபேல் பாதுகாப்பு நிறுவனமானது வடிவமைத்து இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளது. ‘ இந்திய அரசுடனான இஸ்ரேல் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த மகத்தான ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாக இஸ்ரேல் விண்வெளி தொழிலகத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோசப் வெஸ் தெரிவித்துள்ளார்.

மேக் இன் இந்தியா ....
மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தலைசிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் லார்சன் மற்றும் டவுப்ரோ ஆகிய இந்திய நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்