முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020ல் மணியாச்சி-தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை பணி நிறைவடையும்: ரயில்வே மேலாளர் தகவல்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

மணியாச்சி-தூத்துக்குடி மற்றும் மணியாச்சி-நாகர்கோவில் இடையேயான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2020-ல் நிறைவு பெறும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கர்க்  தெரிவித்தார்.திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள், சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர்க் குழாய்கள், நடை மேம்பாலம், ரயில் பெட்டிகள் நிற்கும் இடம் குறித்த டிஜிட்டல் அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கர்க், பார்வையிட்டு அவை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். மேலும், பயணிகள் அமரும் இருக்கைகள், ஓய்வறைகள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:பெருநகர ரயில் நிலையங்களில் ஏ1 அந்தஸ்து பெற்ற ரயில் நிலையங்களக்கு முதல்கட்டமாக இலவச வைபை வசதி ஏற்படுத்தித்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதர ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம்  ய்யப்படும்போது திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்திலும் வைபை வசதி கிடைக்கும். மேலும், ரயில் பயணிகள் தங்குவதற்காக குளிரூட்டப்பட்ட அறைகளுடன் கூடிய ஓய்வறையும் கட்டப்படும். மின்தூக்கி வசதியும் செய்து தரப்படும். மணியாச்சி முதல் நாகர்கோவில் வரையிலும், மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையிலும் நடைபெறும் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் 3 ஆண்டுகளுக்குள் முடிவடையும். இதைத் தொடர்ந்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இரட்டை பாதையில் ரயில்கள் இயக்கப்படும். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்