முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அமெரிக்கா ஏவுகணைகள் வீசியதற்கு ரஷ்யா - ஈரான் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ  - சிரியாவில் அமெரிக்கா ஏவுகணைகளை வீசியதற்கு ரஷ்யா மற்றும் ஈரான் கண்டனம் தெரிவித்து உள்ளன.

விஷவாயு தாக்குதல்
சிரியாவில் பொதுமக்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக அமெரிக்கா அங்கு விமான தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் நடவடிக்கையை இஸ்ரேஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுவரும் நிலையில் ரஷ்யா மற்றும் ஈரான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ரஷ்யா அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் இறையாண்மை அரசுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என ரஷ்யா கூறிஉள்ளது. முன்னதாக ரஷ்யாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுதான் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது என செய்திகள் வெளியாகி இருந்தது.

புதின் கண்டனம்
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் விளாடிமீர் புதின் சிரிய விமானப்படை தளம் மீதான அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலை இறையாண்மை கொண்ட ஒரு நாட்டிற்கு எதிரான விரோத நடவடிக்கை என கருதுகிறார் என அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்து உள்ளது. சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் கடும் கண்டனம்
இதற்கிடையே சிரியாவின் விமானப்படை தளம் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசியதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம், அமெரிக்காவின் தாக்குதலானது போலியான காரணம் கொண்டது என ஈரான் கூறிஉள்ளது. சிரியாவில் உள்ள ஆசாத் ஆட்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவு கரம் நீட்டி வருகிறது. பிராந்தியத்தில் சிரியாவிற்கு பணம், ஆயுதங்கள் மற்றும் ராணுவப் அறிவுரைகள் மற்றும் பயிற்சியை வழங்கி வருகின்றன. சிரியாவில் 6 வருடமாக நடைபெற்று வரும் உள்நாட்டு போருக்கு தானாக முன்வந்து சிரிய அரசுக்கு ஆதரவாக போரிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்