முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசப்பற்று திரைப்பட விழா - கலெக்டர்.வீரராகவராவ் தகவல்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.ஏப்.- மதுரை யாதவா கல்லூரியில் திரைப்பட விழா இயக்குநரகம், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து 3 நாட்கள் நடத்தும் தேசப்பற்று திரைப்பட விழா வரும் 11.04.2017 அன்று தொடங்கவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவுகூறும் வகையிலும், 70ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவினை கொண்டாடும் வகையிலும் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேசப்பற்று திரைப்படவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி மதுரை மாநகர் திருப்பாலை யாதவா கல்லூரியில் இந்திய திரைப்பட சங்கத்தின் சார்பில் தேசப்பற்றினை எடுத்துக்கூறும் திரைப்படங்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் திரையிடப்படவுள்ளது. இதற்கு எவ்வித நுழைவு கட்டணமும் கிடையாது. இத்திரைப்பட விழா வரும் 11.04.2017 முதல் 13.04.2017 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இத்திரைப்படவிழாவில் நாள் ஒன்றுக்கு 3 திரைப்படங்கள் வீதம் 3 நாட்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், இக்பால், லகான், ஐயம் கலாம், பார்டர், சக்தே இந்தியா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார், பாரதி போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இவ்விழாவில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு பதார்த்தங்களும், பல்வகை பொருட்கள் விற்பனை கூடங்களும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படங்களை மதுரை மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு பார்வையிடும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுகொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்