முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பாலைவனம் ஸ்ரீ   லோகாம்பிகை  உடனுறை திருபாலீஸ்வரர்   ஆலயத்தில் பங்குனி மாத பிரமோற்சவ தேரோட்டம்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலைவனம் என்று அழைக்கப்படும்திருபாலைவனம் பகுதியில் பாற்கடலில் இருந்து விழுந்த சிறுதுளி அமுதம் மூலம் சுயம்பு லிங்கமாக உருவான திருப்பாலைவனம் ஸ்ரீ லோகாம்பிகை உடனுறை திருபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரமோற்சவ விழா ஆலயத்தில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது இதனை தொடர்ந்து ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு பஞ்ச மூர்த்தி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ,பூஜைகள் மற்றும் காலை மாலை பூத, சிம்ம ,காமதேனு வாகனம் மற்றும் ,அன்ன வாகனம் ,குதிரை வாகனத்தில் நாள்தோறும்பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

சாமி தரிசனம்  

இதனை தொடர்ந்து பங்குனி மாத பிரமோற்சவ முக்கிய விழாவானதேரோட்டம் ஆயிரக்கண பக்தர்கள் தேர் வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர் சிறப்பாக நடைபெற்றது ஆயிரக்கனான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை லோகாம்பிகை யுடன் சிவபெருமான் திருபாலீஸ்வரர் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார் திருப்பாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பிரமோர்சவ விழாவில் திருத்தேரோட்டத்தினை பொன்னேரி எம்.எல்.ஏ.சிறுணியம்பலராமன்,இந்து அறநிலைய துறை மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர். கோயில் நிர்வாகிகள்,திருப்பாலைவனம் கிராமத்தினர் அருகில் இருந்தனர்.விழாவில் திருபாலைவனம் பொன்னேரி பழவேற்காடு மெதூர் வேம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த எராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்