முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன ஆயுதங்கள் வீசப்பட்ட இடத்தில் சிரியா விமானப் படைகள் மீண்டும் தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்  - சிரியா நாட்டில் சமீபத்தில் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் அந்நாட்டு விமானப் படை நேற்று மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

கண்டனம்
சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றவை மிக காரசாரமான கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

அமெரிக்கா தாக்குதல்
இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்று முன்தினம் அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் இந்த அதிரடி தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

9 பேர் பலி
இதையடுத்து, ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷைராத் விமானப்படை தளத்தின்மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் விமானப்படைத் தளம், போர் விமானங்கள் மற்றும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை தீக்கிரையாயின. அங்கிருந்த 9 வீரர்களும் கொல்லப்பட்டனர்.

மீண்டும் தாக்குதல்
இந்நிலையில், முன்னர் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்திய ஷெய்குன் நகரத்தில் அந்நாட்டு விமானப் படை நேற்று மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இன்றைய தாக்குதலை நடத்தியது சிரியா நாட்டுக்கு சொந்தமான போர் விமானமா?, அல்லது, ரஷியா நாட்டு போர் விமானமா? என்பது தொடர்பான உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை தொடர்பான விவரங்களும் கிடைக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்