முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் - மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

 

 தேனி.ஏப்.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம்,தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசின் உத்தரவின்படி, மாவட்டத்தில பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 10.04.2017 முதல் 25.05.2017 வரை நடைபெறவுள்ளது. எனவே, கணக்கெடுப்பு பணி நடைபெறும் போது குடியிருப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப்பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை அணுகி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்களாக என்பதனை உறுதி செய்திட வேண்டும். ஒரு குழந்தை தொடர்ந்து 7 வேலை நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அப்பள்ளியின் வகுப்பு ஆசிரியர்கள் அக்குழந்தையின் பெற்றோரை சந்தித்து அக்குழந்தையை பள்ளி வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கணக்கெடுப்பு பணி நடைபெறும் போது சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொண்டு நிறவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களை இப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளின் கல்வி தொடர்வதற்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் தங்கி பயிலுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள், தொழிற்சாலைகள,; தேனீர் நிலையங்கள், அங்காடிகள் போன்ற பல்வேறு தொழில் சம்பந்தப்பட்ட இடங்களில் குழந்தைகள் யாரேனும் பணியமர்த்தப்பட்டுள்ளார்களா என்பதனை கண்டறிந்து தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, காவல்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, குழந்தைகள் ஏதேனும் பணியமர்த்தப்பட்டிருந்தால் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்ககள் மேற்கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கென உள்ளடக்கிய கல்வியின் கீழ் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொண்டு அதன் வாயிலாக பலதரப்பட்ட இயலா குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். 0 முதல் 18 வயதிற்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிவதோடு, ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று எந்த ஒரு மாற்றுத்திறன் கொண்ட குழந்தையும் விடுபடாமல் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், 0 முதல் 5 வயதிற்குட்பட்ட சிறப்பு தேவையுள்ள சிறப்பு மாணவர்களையும் கண்டிப்பாக கணக்கெடுத்திட வேண்டும். அவர்களுக்கு தொடக்க நிலை ஆயத்த பயிற்சி வழங்கிட ஏதுவாக அக்குழந்தை சார்ந்த சரியான தகவல்களை அறிந்திட வேண்டும். எனவே, 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், 1 வயது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளிப்பதற்கும் இக்கணக்கெடுப்பு பணியினை சிறப்பாக செயல்படுத்திட அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம்தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வாசு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜா மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.ராஜராஜேஸ்வரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) திருமதி.ரோஸ்லின் உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.வனஜாகிரணாப் செல்வகுமாரி அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட அலுவலா ஐய்யப்பன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்