முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திட்ட முகாமில் 32பேருக்கு விதவை சான்று தாசில்தார் ஜெயந்தி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணம் அருகே அம்மா திட்ட முகாமில் மனுகொடுத்த 32 பேருக்கு விதவை சான்று வழங்கபட்டன. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரை அடுத்த காவனூர் ஊராட்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில்; அம்மா திட்ட முகாம் நேற்று (வெள்ளிகிழமை) நடைபெற்றது. ஒவ்வொரு வாரம் ஒரு கிராமம் என்கிற தமிழக அரசின் ஆணைக்கிணங்க இம்முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு வந்தவர்களை நிர்வாக அலுவலர் முகமது சுபான்; வரவேற்று பேசினார். வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜசோழன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஜெயந்தி, முகாமிற்கு தலைமை தாங்கி கூட்டத்தினரிடையே 82 மனுக்களை பெற்று கொண்டார். பெற்று கொண்ட மனுக்களில் மூன்று மாற்று திறனாளி மனுக்கள் உட்பட 55 பேர் மாதாந்திரா அரசு உதவி தொகை கோரியும், 32பேர் தங்களுக்கு விதவை சான்று கோரிய மனுக்கள்; இதனிடையே விதவை தாய்மார்களின் 32மனுக்கள் ஏற்கபட்டு சான்றுகள் வழங்க ஆணையிட்டார். பின்னர், கூட்டத்தினர் மத்தியில் பேசியபோது அம்மா திட்ட முகாமானது உங்களுக்காக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. அதாவது மக்களின் குறைகள் பல சிரமங்களுக்கிடையில் அலுவலகத்திற்கு சென்று தீர்வு காணாமல் அவர்களின் இடங்களை அரசு அலுவலர்கள் தேடி சென்று தீர்த்து வைக்க வேண்டுமென அறிவித்த உத்தரவிற்கிணங்க நேரிடையாக உங்கள் கிராமங்களில் முகாமிட்டு நாங்கள் (அதிகாரிகள்) வந்திருக்கிறோம். இன்று (நேற்று) பலரது குறைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. இதுபோல் உங்கள் கிராமங்கள் வளத்துடன் இருக்க உங்களது வீட்டருகில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென்றும் கேட்டு கொள்ளுகிறேன் இவ்வாறு அவர் பேசினார். இம்முகாமில் மக்கள் பிரதிநிதி காவனூர் முன்னாள் ஒன்றிய கவன்சிலர் சுப்பிரமணி, முன்னாள் வார்டு உறுப்பினர் பிரான்சிஸ், ஊர்காவல் படை வீரர் ஏசுபாதம், அலுவலக உதவியாளர் குமார், வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், கிராம அதிகாரிகள் நரேஷ், மார்கெட், மற்றும் சிப்பந்திகள். ஊராட்சி செயலாளர் தேவன், சிப்பந்தி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு மக்கள் பணியாற்றினார்கள்;. இறுதியில் காசனூர் கிராம அதிகாரி முகமது சுபான் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்