முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாகூர் தற்கொலைப்படை தாக்குதல் : பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

லாகூர்  - லாகூர் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையை 10 பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித் துள்ளனர்.பாகிஸ்தானின் லாகூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை நேற்று அதிகாலை பாகிஸ்தான் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல்
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண காவல்துறையில் ஒரு பிரிவான பயங்கரவாத தடுப்பு படையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் கூறும் போது, “  பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் லாகூர் மால் ரோடு பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 போலீஸ் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜமாத் உல் அஹார் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.

10 பயங்கரவாதிகள் ...
லாகூர் மால் தாக்குதலுக்கு பொறுப்புடையவர்கள் தங்கியிருக்கும் இடமும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் பயங்கரவாத தடுப்பு படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்