முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நேற்று (08.04.2017) மருத்துவ முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார் அவர்கள் தலைமையிலும் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பூங்கொடி, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையும் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் செய்தி நிறுவனங்களின் பணிபுரியும் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் நலனை பேணிக்காக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் இரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இ.சி.ஜி, எக்ஸ்ரே, அல்ராஸ்கேன், கண் பரிசோதனை, .எழும்பு பரிசோதனை, பல் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, வயிறு தொடர்பான பரிசோதனைகள், அறுவை சிகிச்சை, இருதய நோய் பரிசோதனை, தோல் பரிசோதனை, சரிவிகித ஊட்டச்சத்து குறித்த ஆலோசனை உள்ளிட்ட 16 வகையான முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் சேலம் மாவட்டத்திலுள்ள செய்தி ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.எம்.ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சுவாமிநாதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கு.ப.சதீஸ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) கா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்