ஓசூர் அருகே கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
hsr 2

ஓசூர் அருகே கோபசந்தித்தில் உள்ள வெங்கடேஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.இதையட்டி காலை சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்வ தரிசன நிகழ்ச்சிக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து பக்தர்கள் ஊர்வலமாக தேரை இழுத்து சென்றனர். அந்த நேரம் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றார்கள்.இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோபசந்திரம் பகுதியில் ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர், வழங்கப்பட்டது. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு பக்தி சொற்பொழிவு இசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாண வேடிக்கைகளுடன் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. நேற்றைய தேர்த்திருவிழாவில் சூளகிரி, உத்தனப்பள்ளி, பாத்தகோட்டா, வேப்பனப்பள்ளி, ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: