முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் ஜெனரேஷன் குறித்து டி.சி.எஸ். யூத் சர்வே

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      கோவை

நவீன தொழில்நுட்பங்களை விரும்பும், 12-18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மத்தியில், அவர்களது டிஜிட்டல் வழக்கங்களை விளக்கும் நாட்டின் மிகப்பெரிய கணக்கெடுப்புகளில் ஒன்றாக டிசிஎஸ் யூத் சர்வே திகழ்கிறது. ஜெனரேஷன் இசட், 1995 - ம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த தற்காலத்து இளம் தலைமுறையினர் ஆவர். கோயம்புத்தூர் சார்ந்த தொழில்நுட்பம் - தொடர்பான சில கணக்கெடுப்பு முடிவுகள் வருமாறு

கோயம்புத்தூர் சென்இசட் மத்தியில், ஸ்மார்ட்/போன்கள் 18 சதம் டெஸ்க்டாப் / லேப்டாப்புகள் 12 சதம், ஸ்மார்ட் வாட்சுகள் 10 சதம், கேமிங் கன்கோல்கள் அண்ட் விஆர் ஹெட்செட்கள் 7 சதம் போன்ற நவீன கேட்ஜெட்கள் மீது, உயர் எதிர்கால வாங்குதல் சாத்தியக்கூறுகள் உள்ளன.

57 சதம் மாணவர்கள், தங்களது ஸ்மார்ட்போன்களில் உள்ள 3ஜி/4ஜி இணைப்பை பயன்படுத்தியும் மற்றும் 46 சதம் மாணவர்கள் வீட்டிலுள்ள பிக்ஸ்டுலைன் / வை-பை இணைப்பை பயன்படுத்தியும் தொடர்ந்து இணைப்பில் இருக்கின்றனர். பிக்ஸ்டு லைன் இணைய அணுகுவசதியைக் காட்டிலும் மொபைல் இணைய அணுகுவசதியின் வழியாக இணைப்பில் இருக்கும் இப்போக்கு, கோயம்புத்தூரில் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகத் திகழ்கிறது. எங்கிருந்தாலும் இணைப்பில் இருக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாகும்.

விளையாட்டு ஆர்வலர்கள் மிகவும் பயன்படுத்தும் ஆப்பாக கேமிங் ஆப்ஸ்களை 51 சதம் கல்வி ஆப்ஸ் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களை 39 சதம் தேர்ந்தெடுத்துள்ளனர்

கோயம்புத்தூர் இளைய சமுதாயத்தினர் மத்தியில் மிகப்பிரபலமான சமூக ஊடகமாக பேஸ்புக் 40 சதம், கூகுள் பிளஸ் 12 சதம். இன்ஸ்டாகிராம் 6 சதம் மற்றும் டுவிட்டர் 5 சதம் ஆகியவைகள் படிப்படியாக பிரபலமடைந்து வருகின்றன.

அப்துல்கலாம், ஸ்டீவ்ஜாப்ஸ், பில்கேட்ஸ், சத்யா நாடெல்லா, சுந்தர் பிச்சை போன்ற தகவல்தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் அறிவியல் நிபுணர்களை மாணவர்கள் அதிகளவு முன்னுதாரணமாகக் கொண்டுள்ளனர். இதன்காரணமாக அவர்களது முதல் கனவுப்பாடமாக பொறியியல் திகழ்கிறது.

சென்னை மற்றும் கோயம்புத்தூர், டிசிஎஸ், தலைவர் சுரேஷ் ராமன் கூறுகையில், இளம் இந்தியர்கள் இணையும், பொழுதுபோக்குகளை மேற்கொள்ளும் மற்றும் தகவல்களை அணுகும் வழிமுறைகளில் ஸ்மார்ட் கேட்ஜெட்கள் மற்றும் ஆப்ஸ்கள் வழியாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரு புரட்சியை உண்டாக்கியுள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட டிசிஎஸ் வருடாந்திர கணக்கெடுப்பு, நாளை தொழில்நிபுணர்களின் தொழில்நுட்ப வழக்கங்கள் மற்றும் விருப்பங்கள் தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை வழங்கியுள்ளது. கோயம்புத்தூர் ஜெனரேஷன் இசட் இந்நகரம் “பொறியியல் மையமாக” தொடர்ந்து திகழ வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்