முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகமாயி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர் -மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மறவபட்டியில் மகமாயி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையட்டி முதல்நாள் யாகசாலை பூஜையும், மறுநாளும் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 3&வது நாள் காலையில் லெட்சுமி, கோபூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து அழகர்மலை நூபுரகங்கை, காசி, ராமேஸ்வரம், வைகை, கொடுமுடி, காவேரி, மற்றும்         ம-ஞ்சமலை உள்ளிட்ட பல்வேறு புனித தீர்த்த குடங்கள் தயார் நிலையில் வைக¢கப்பட்டிருந்து மேளதாளங்கள் முழங்க யானை ஊர்வலத்துடன் கோபுர உச்சிக¢கு எடுத்துச்செல்லப்பட்டது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க குடம்குடமாக புனிதநீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. அப்போது கோவிலை சுற்றி ஏராளமான பக¢தர்கள் குவிந்து நின்று தரிசனம் செய்தனர். அவர்களுக¢கு கும்பாபிஷேக தீர்த்தமும், பூஜைமலர்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டன. பிறகு முலவர் சன்னதியில் மகமாயி அம்மனுக¢கு பல்வேறு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தது. இதைபோலவே இக¢கோவிலின் உபகோவில்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. ஆயிரக¢கணக¢கான பக¢தர்களுக¢கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக வேலூர் மாவட்டம், கமலக¢கன்னியம்மன் கோவில் சச்சிதானந்த சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கோவில் அறங்காவலர் மறவபட்டி கே.ஜி.பாண்டியன், சாரதா நந்தசுவாமிகள், தடய அறிவியல் இயக¢குநர் விஜயகுமார், சென்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், வக¢கீல்கள் புகழேந்தி, ராஜாசெந்தூர்பாண்டியன், முன்னாள் யூனியன் தலைவர் கீதாரவிச்சந்திரன், துணைத்தலைவர் முத்துமாரிபாண்டியன், ஒன்றியசெயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு முக¢கிய பிரமுகர்கள், ஆன்மீக தலைவர்கள், சாதுக¢கள் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் கே.ஜி.பி.குழுமம் மேலாளர் மறவபட்டி மாரிச்செல்வம் நன்றி கூறினார்.

தொடர்ந்து அன்று மாலையில் மாட்டுவண்டி பந்தயமும், சேவல் மற்றும் கிடாய் முட்டு சண்டையும் நடந்தது. பின்னர் அன்றிரவு கலைநிகழ்ச்சிகளும், சென்டைமேள கச்சேரியும் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்