முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை எஸ்இ போர்டஜ் நிறுவனத்துக்கு “எக்ஸலன்ஸ் விருது”

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      கோவை

எஸ்இ போர்ஜ் லிமிடெட் (எஸ்இஎப்எல்), இந்தியாவின் முன்னணி மாபெரும் உருக்கு உற்பத்தியாளருக்கு, ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் “எக்ஸெலன்ஸ் விருது” வழங்கியுள்ளது. சிறந்த வளர்ச்சிமிக்க பங்குதாரராக அங்கீகாரித்து, புதுமையான பொருள் தயாரிப்பு, சரியான நேரத்துக்கு பொருட்களை வழங்குதல், உயர்ந்த தரம், முழுமையான இயந்திர தயாரிப்புபோன்றவைகளுக்காக, இந்தியா,  அமெரிக்கா ஜிஇ நிறுவனங்கள் 2016ம் ஆண்டுக்கான விருதை வழங்கியுள்ளது. சமீபத்தில் புனேயில் நடந்த இன்டியா சப்ளையர் கான்பிரன்ஸ் 2017மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

கோவையில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம், உருக்கு தயாரிப்பில் ஆண்டுக்கு 1,20,000ம் டன் உற்பத்தி திறனையும், இயந்திர காஸ்டிங் தயாரிப்பில் ஆண்டுக்கு 55,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறனையும் கொண்டது. அதிநவீன இயந்திரங்கள், வளாகம், டக்டைல் மற்றும் கிரே இரும்பு காஸ்டிங்குகளை 1000 கிலோ முதல் 5000 கிலோ வரை தயாரிக்கும் திறன் படைத்தது. இந்த உருக்குகள் முழுவதும் தயார் செய்யப்பட்டு, பெயிண்டிங் செய்யப்பட்டு இணைப்புக்கு தயாரானாக இருக்கும். எஸ்இ போர்ஜ் பவுண்டரி, கொச்சி, சென்னை, துாத்துக்குடி துறைமுகங்களுடன் நேரடி போக்குவரத்து இணைப்பை பெற்றுள்ளது.

எஸ்இ போர்ஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்  .சுனில் குப்தா பேசுகையில், “வாடிக்கையாளர்களின் தேவையை, சரியான நேரத்தில் நிறைவேற்றுதல், புதிய பொருட்கள் உற்பத்திபோன்றவைகளின் அங்கீகாரத்துக்கு கிடைத்த விருதாக கருதுகிறோ நம்பிக்கை, ஒருங்கிணைந்த முறைகள், அதிநவீன தொழில்நுட்பம், புதுமையமான தீர்வுகள் மற்றும் திறன்மிக்க பணியாளர்கள் போன்றவைகளுக்காக ஜிஇ எங்கள் மீது வைத்துள்ள தொடர் நம்பிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இரண்டாவது ஆண்டாக இந்த விருதினை பெறுவது எங்களது அணியினருக்கு பெருமை அளிக்கிறது.தொடர்ந்து ஜிஇ நிறுவனத்தின் பங்குதாராக இருப்பதோடு, பொறியியல் துறையி்ல் புதுமை படைக்க தீர்வுகளை செய்வோம். எங்களது நிறுவனத்திலேயே உள்ள 100% பரிசோதனை வசதியானது, சர்வதேச தர நிர்ணயித்துக்கு ஒப்பானது என தயாரிப்புகளை உறுதி செய்கிறது,” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்