முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொங்கு என்ஜினீயரிங் கல்லுரியில் விளையாட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

கொங்கு என்ஜினீயரிங் கல்லுரியில் 33 வது விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர்எஸ்.குப்புசாமி வரவேற்றார். கொங்கு வெள்ளாளர்தொழில் நுட்ப அறக்கட்டளை பொருளாளர் ஈ. ஆர். கிருஷ்ணன் தலைமைதாங்கினார். சிறப்பு விருந்தினர்கள் விளையாட்டுகளை தொடங்கிவைத்தனர்.100,200 400 மீட்டர் ஓட்டப்பந்தையங்கள்,கரோத்தே பயிற்சி பெற்ற மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகள்,மற்றும்மாணவர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது .விழாவில் கோவை ரெயில்வே தடகள பயிற்றுனரும்,ஆசியக்கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற முன்னாள் தடகள வீரருமான கே.எஸ். முகமது நிஜாமுதீன் பங்கேற்று  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ –மாணவிகளுக்பரிசுகள் வழங்கினார். இதில் கல்லூரி தாளாளர் ஏ. வெங்கடாசலம், அறக்கட்டளை  தலைவர் எஸ்.பரமேஸ்வரி லிங்க மூர்த்தி,அறங்காவலர் பார்வதி,கொங்குபாலிடெக்னிக் தாளாளர் ஆர்.எம்.தேவாராஜா, மற்றும் பலர்கலந்துகொண்டனர் முடிவில் உடற்கல்வி இயக்குனர் என்.செந்தில் குமார் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்