முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எல்.பி.ஜி.டேங்கர் லாரியில் வாயு கசிவால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      சேலம்

சென்னையில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதிக்கு சென்ற எல்.பி.ஜி டேங்கர் லாரி சேலம் அருகே மேட்டுபட்டி சுங்க சாவடியில் விபத்திற்குள்ளானதில், டேங்கரில் இருந்து வாயு கசிந்து வெளியேறியதால் பரபரப்பு.ஏற்பட்டது. இதனால் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தம்... வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பபடுவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.....சென்னையில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைக்கு எரி வாயு பாரம் ஏற்றி கொண்டு எல்.பி.ஜி டேங்கர் லாரி ஓன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுபட்டி சுங்கசாவடிக்கு வந்த போது, சுங்கசாவடியில் பழுது ஏற்பட்டு நின்றது. இதனையடுத்து அந்த லாரியை சுங்கசாவடி பகுதியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது டேங்கர் லாரியின் பின் பகுதியில் வாயு அளவை குறிப்பிடும் பகுதியில் லேசான உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பில் இருந்து வாயு கசிய துவங்கியது. இதனையறிந்த லாரி ஓட்டுனர் மற்றும் சுங்கசாவடி பணியாளர்கள் அதிர்ச்சிகுள்ளாயினர். இதனை தொடர்ந்து வாயு வெளியேறி கொண்டிருக்கும் டேங்கர் லாரியை அங்கிருந்து பாதுகாப்பாக தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்தனர். மேலும் வாயு கசிவதை நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை, மாறாக டேங்கர் லாரியில் இருந்து வாயு அதிக அளவு வெளியேறியதால் மேலும் அதிர்ச்சியடைந்து இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தினர். குறிப்பாக சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலம் வழியாக கோவை மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்கமாகவும் வந்த அணைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு, அந்த பகுதியில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தினர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உதவியோடு, கசியும் வாயுவை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கசிவை நிறுத்த முடியாததால், பெருந்துறையில் இருக்கும் பொறியாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.மேலும் தண்ணீரை பீச்சி அடித்து வாயு வெளியேறும் பகுதியை குளிர செய்தனர். சுமார் நான்கு மணி நேரமாக 15 லாரிகளில் கொண்டுவரப்பட்ட தண்ணிரை கொண்டு குளிர வைத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சம்மந்தபட்ட பொறியாளர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி வாயு கசிவதை முற்றிலுமாக நிறுத்தினர். இதனையடுத்து அங்கு நிலவி வந்த பரபரப்பு குறைந்தது. தொடர்ந்து வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஐந்து மணி நேரமாக மிகுந்த பரபரப்பு நிலவியது..

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago