முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 9 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் புகழ்வாய்ந்த வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா அரோகரா கோசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

  ராமநாதபுரம் நகரில் மைய பகுதியில் அமைந்துள்ளது புகழ்வாய்ந்த அருள்மிகு வழிவிடுமுருகன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா காவடி, பால்குடம் போன்றவற்றுடன் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று 77வது பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சிவயல் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம், காவடி, வேல்குத்தி ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து முருகன் கோவிலை அடைந்தனர். வேல்குத்தி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் தங்களின் உடலில் பல இடங்களில் வேல் குத்தி அரோகரா என்று கோஷமிட்டபடி வழியெங்கும் பக்தர்களின் கூட்டத்தில் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். நேற்று வழக்கமான பங்குனி வெயில் மக்களை வாட்டி வதைத்தாலும் சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரளாக வந்திருந்து விழாவை கண்டு களித்ததோடு, முருகனின் அருள் பெற்று சென்றனர்.

    பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்புகள், சங்கத்தினர்  சார்பில் நீர்மோர் பந்தல், பானகம், அன்னதானம், தண்ணீர் முதலியவை வழங்கப்பட்டன. கடும் வெயில் காரணமாக இந்த குடிநீர் பானங்களை பக்தர்கள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் நிறைவாக நேற்று இரவு கோவிலின் முன்புறம் பிரமாண்மாக வளர்க்கப்பட்ட பூக்குழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷம் முழங்க இறங்கினர். விழாவில், ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago