முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 252 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்குறைகேட்புக் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதிவாணன் உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago