முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடிய, விடிய சாலை சீரமைப்பு: வாகன போக்குவரத்து தொடங்கியது

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      சென்னை

சுரங்கம் தோண்டும் பணியின் போது சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி விடிய, விடிய முழுவீச்சில் நடைபெற்றதை அடுத்து நேற்று வாகன போக்குவரத்து தொடங்கியது.

 

சென்னை அண்ணா சாலை பகுதியில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் மணி நடந்து வருகிறது.நேற்று முன் தீனம் மதியம் "டனல் போரிங்" எந்திரம் மூலம் சுரங்கப்பதை தோண்டும் பணி நடைபெற்ற போது அண்ணாசாலை சர்ச்பார்க் பள்ளி அருகே சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது.இதில் அவ்வழியே வடபழனி நோக்கி சென்ற மாநகர பஸ்சும், டாக்டர் ஒருவர் ஓட்டிச்சென்ற காரும் சிக்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் டாக்டர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. பள்ளத்தில் சிக்கிய மாநகர பஸ்சையும், காரையும் ராட்சத கிரேன் மூலம் மீட்டனர்.பள்ளம் ஏற்பட்ட சாலையை சீரமைக்கும் பணியில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டனர் சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் விடிய விடிய சாலை அமைத்தனர்.

 

சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சேதம் அடைந்த சாலை முழுவதும் பெயர்ந்து எடுக்கப்பட்டு உறுதி தன்மையுடைய காங்கிரீட் மற்றும் இரும்பு பலகை கொண்டு சாலை அமைக்கப்பட்டது.நேற்று காலை சாலை அமைக்கும் பணிநடந்து கொண்டிருந்த போதே ஒரு பகுதியில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்டோ, கார்கள் செல்ல அனுமதித்தனர்.பாரிமுனையில் இருந்து சைதாப்பேட்டை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அண்ணாசாலை ஜி.பி.ரோடு வழியாக சென்று அவ்வை சண்முகம் சாலை கோபாலபுரம் வழியாக ஜெமினி பாலத்தில் செல்ல திருப்பி விடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிய சாலை அமைக்கப்பட்டஇடத்தில் காங்கிரீட் கலவை முழுவதும் காய்ந்ததும் பிற்பகல் கனரக வாகன போக்குவரத்து தொடங்கியது.

 

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

 

பள்ளம் ஏற்பட்ட சாலையை சீரமைக்கும் பணி விடிய, விடிய முழுவீச்சில் நடைபெற்றது. காங்கிரீட் உறுதி தன்மை ஆனதும் பிற்பகல் 11 மணிக்கு பின்னர் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.வாகன ஓட்டிகள் பயப்பட தேவையில்லை. இது போல சம்பவம் மீண்டும் நடைபெறாது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago