முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசர சிகிச்சை மருத்துவப் படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு பட்டமளிப்பு விழா

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- அவசர சிகிச்சை மருத்துவப் படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்ற டாக்டர்களுக்கு பட்டமளிப்பு விழா மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய டாக்டர்கள் சங்க  மதுரை மீனாட்சி கிளையின் கல்வி செயலர் டாக்டர் குமார் வரவேற்றார். மருத்துவ இயக்குனர் டாக்டர்  ரமேஷ் அர்த்தநாரி தலைமை தாங்கினார். குத்துவிளக்கேற்றி டிப்ளமோ பட்டம் வழங்கிய காமன்வெல்த் நாடுகளின் சுகாதாரத்துறை சேர்மன் டாக்டர் அருள்ராஜ் கூறுகையில்:
 இன்றைய சூழலில் சாலை விபத்து, மாரடைப்பு, மூச்சுத் திணறல், பக்கவாதம், இரத்தவாந்தி உள்ளிட்ட பல்வேறு உயிருக்கு பாதிப்புள்ள நோய்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். பாதிப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் தகுந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் உயிரைக் காப்பாற்றலாம். இதனையே கோல்டன் மணித்துளிகள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பாதிப்படைந்த நோயாளிகளை காப்பாற்றுவதில் டாக்டர்களுக்கு தனிப்பட்ட அறிவும், திறமையும் தேவை. இங்கு பயின்ற மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தலைசிறந்த மருத்துவமனைகளில் பணிபுரிந்து
 வருகின்றனர். இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 17 பேர் பயிற்சி பெற்று டிப்ளமோ பட்டம்பெற்றனர். அவசர சிகிச்சை என்பது எந்த நேரத்திலும், எங்கும் நடைபெறலாம். அந்த நேரத்தில் பாதிக்கப்படவரின் நிலை அறிந்து முதல் உதவி அளித்து பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து வந்து உயிரைக் காப்பாற்றலாம். அவசர சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வேண்டும். இங்குபடித்த பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் உடன் பணிபுரியும் டாக்டர்களுக்கு, செவிலியர்களுக்கு மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். நவீன மருத்துவ முன்னேற்றங்களை தெரிந்து பொது மக்களுக்கு சேவையாற்றிட முன்வரவேண்டும் என்று கூறினார்.
 இந்திய டாக்டர்கள் சங்க முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார், தமிழ்நாடு
 மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஜெயலால், மருத்துவமனையின் நரம்பியல் துறை நிபுணர் டாக்டர்க ணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறைதலைவர் டாக்டர் நரேந்திர ஜனா நன்றி கூறினார். நன்றி!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago